இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் இலங்கை அணியை ஜிம்பாப்வே அணி தடுமாறவைத்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா(கே), மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷங்கா.
நியூசிலாந்து: கிரேக் எர்வின், டினாஷே கமுன்ஹுகாம்வே, பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா(கே), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, பிளெசிங் முசரபானி