இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தற்போது நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டி முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், அதேசமயம் ஜிம்பாப்வே வெற்றிபெற்றால் தொடரை சமன் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜிம்பாப்வே: ஜெரால்ட் கும்பி, டினாஷே கமுன்ஹுகாம்வே, கிரேக் எர்வின்(கே), மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, லூக் ஜாங்வே, ரிச்சர்ட் நங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி
இலங்கை: அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), ஷெவோன் டேனியல், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷன் மதுஷங்க.