விதிமுறையை மீறிய வீரருக்கு தடை வித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்!

SLC hands Chamika one-year ban for violating contract during 2022 ICC T20 World cup
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஆனால் சமிகா கருணாரத்னே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News