இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஒடிசா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்ரன்சு சேனாபதி 65 ரன்களையும், அன்ஷுமன் ரத் 51 ரன்களையும் எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் 35 ரன்களிலும், சாட் சுதர்சன் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் தமிழ்நாடு அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது மட்டுமில்லாமல், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஒடிசா அணியையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பற்றது.