டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர்(கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட், அடில் ரஷித், ரீஸ் டாப்லி.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கே), கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் , பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.