IND vs SA: தொடரிலிருந்து விலகிய ஐடன் மார்க்ரம்!

South Africa batter Aiden Markram ruled out of remainder of T20I series against India
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க பேட்டர் ஐடன் மார்க்ரம், கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஏழு நாள் தனிமைப்படுத்தப்பட்ட மார்க்ரம், தற்போது டி20 தொடரிலிருந்து விலகி தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பியுள்ளார்.
கரோனா பாதிப்பு நீங்கினாலும் டி20 ஆட்டங்களில் உடனடியாக விளையாட முடியாத காரணத்தால் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.
தற்போது 27 வயதாகும் ஐடன் மார்க்ரம், தென் ஆப்பிரிக்க அணிக்காக 31 டெஸ்டுகள், 38 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News