ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் துஷ்மந்தா சமீராவுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றங்களும் இல்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கேன் வில்லியம்சன் (கே), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ரொமாரியோ ஷெஃப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்.