ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலபப்ரீட்சை நடத்தவுள்ளன. பார்படாஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ல இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியானது முதல் போட்டியில் மழை காரணமாக வெற்றிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியானது மிகப்பெரும் ரைவல்ரியாக கருதப்படும் நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கத்தை செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கே), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இங்கிலாந்து : ஜோஸ் பட்லர்(கே), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்