T20 WC 2024, Semi Final 2: ரோஹித் சர்மா அரைசதம்; இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
![T20 WC 2024, Semi Final 2: Rohit, Suryakumar fine knocks help India score 171/7 in 20 overs against T20 WC 2024, Semi Final 2: ரோஹித் சர்மா அரைசதம்; இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு!](https://img.cricketnmore.com/uploads/2024/06/rohit-sky-lg.jpg)
T20 WC 2024, Semi Final 2: ரோஹித் சர்மா அரைசதம்; இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமாக தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement