அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதன்படி ஆண்டிகுவாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ரிஷாத் ஹுசைன், தாவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன், ஜக்கார் அலி, மஹ்முதுல்லா ரியாத், மெஹ்தி ஹசன், தன்சீம் ஹசன் ஷகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.