அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
பார்படாஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முகமது சிராஜிற்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், குல்பாதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, ரஷித் கான்(கே), நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.