ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்றுவந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இன்றுடன் நிறைவுபெறுகிறது.
துபாயில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுவரை இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், இப்போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
நியூசிலாந்து அணி: மார்டின் கப்தில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேய்ஃபெர்ட், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.