எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
பிரிஸ்பேனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 1இல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர்(கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்.