டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. இதில் இன்று அடிலெய்டில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நெதர்லாந்து : ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடோவ்ட், டாம் கூப்பர், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஃப்ரெட் கிளாசென், பால் வான் மீகெரென், பிராண்டன் குளோவர்
ஜிம்பாப்வே : வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின்(கே), ரெஜிஸ் சகப்வா, மில்டன் ஷும்பா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸிங் முசரபானி.