டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னெறியுள்ளன.
இந்நிலையில் மெல்போர்னில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
ஜிம்பாப்வே: வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின்(கே), ரெஜிஸ் சகப்வா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முனியோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்கராவா, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி.