ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஒன்றில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள அணிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், வாழ்வா சாவா ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கே), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மொசாடெக் ஹொசைன், தஸ்கின் அகமது, நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷாஹீன் அஃப்ரிடி.