டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 12ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ், ரிச்சி பெரிங்டன்(கே), மைக்கேல் லீஸ்க், கலம் மேக்லியோட், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட் வீல்.
ஜிம்பாப்வே : கிரேக் எர்வின்(கே), ரெஜிஸ் சாகப்வா, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் நகரவா, டெண்டாய் சதாரா, பிளஸ்ஸிங் முசரபானி.