டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 11ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன்(கே), பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல், ஜான்சன் சார்லஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஒடியன் ஸ்மித், ஓபேத் மெக்காய்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், சிமி சிங், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில்