டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதனாத்தில் நடைபெறுகிறது.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் 4 புள்ளிகளை பெற்று 2ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி அடுத்து வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுவிட்டால், நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
அதேபோல் வங்கதேச அணியும் 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த அணியும் நாளை இந்தியாவுக்கு எதிராக, அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுவிட்டால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியில் சௌமியா சர்காருக்கு பதிலாக ஷொரிஃபுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கன இந்திய அணியில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக மீண்டும் அக்ஸர் படேல் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கே), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அஹ்மது.