ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் வாழ்வா சவா ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது,
சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய இரண்டிலுமே தலா 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு குரூப்களிலிருந்தும் தலா 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, லோக்கி ஃபர்குசன், டிரென்ட் போல்ட்.
அயர்லாந்து : பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், ஃபியோன் ஹேண்ட், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்.