டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் சுற்று ஆட்டம் ஹாபர்டில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ், ரிச்சி பெரிங்டன்(கே), கலம் மேக்லியோட், கிறிஸ் கிரீவ்ஸ், மைக்கேல் லீஸ்க், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட் வீல்
வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷமர் புரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(கே), ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், அகேல் ஹோசின், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.