டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு!
-lg.jpg)
T20 World Cup Warm up Matches 2022: Australia have won the toss and have opted to field
டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News