டிஎன்பிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்றுள்ள சேப்பாக் அணி இன்றைய போட்டியிலும் தனது வெற்றி பயணத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: கௌஷிக் காந்தி (கே), ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், அலெக்சாண்டர்.
ரூபி திருச்சி வாரியர்ஸ்: சந்தோஷ் சிவ், அமித் சாத்விக், நித்திஷ் ராஜகோபால், முகமது அத்னான் கான், ஆதித்யா கணேஷ், ஆண்டனி தாஸ், ஆகாஷ் சும்ரா, எம் மதிவண்ணன், சர்வன் குமார், ரஹில் ஷா (சி), சுனில் சாம்.