தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கவுள்ளது.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் அறிமுக சீசனில் களமிறங்கும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இன்றைய போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் ஸ்பார்டன்ஸ் (விளையாடும் லெவன்): விஜய் சங்கர், கோபிநாத், டேரில் ஃபெராரியோ (கே), எஸ் அபிஷேக், அக்ஷய் சீனிவாசன், உமாஷங்கர் சுஷில் , பி பிரனேஷ், முருகன் அஸ்வின், கணேஷ் மூர்த்தி, ரவி கார்த்திகேயன், ஜி.பெரியசாமி.
லைகா கோவாய் கிங்ஸ் (விளையாடும் லெவன்): ஷாருக் கான் (கே), யு முகிலேஷ், அஸ்வின் வெங்கடராமன், சாய் சுதர்சன், அபிஷேக் தன்வர், கங்கா ஸ்ரீதர் ராஜு, ஆர் கவின், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், எஸ்.அஜித் ராம், என். செல்வன் குமரன்