தமிழகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 7ஆவது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் திருநெல்வேலியில் இன்று அரங்கேறும் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். நடப்பு சீசனில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் கோப்பையை எந்த அணி வெலலும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ்: அருண் கார்த்திக் (கே), சூர்யபிரகாஷ், அஜித்தேஷ் குருஸ்வாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன், சோனு யாதவ், என்எஸ் ஹரிஷ், பொய்யாமொழி,மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின்.
லைகா கோவை கிங்ஸ்: எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார், பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக் கான்(கே), ராம் அரவிந்த், அதீக் உர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், வள்ளியப்பன் யுதீஸ்வரன்.