வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
வங்கதேசம்: ஷமிமா சுல்தானா, ஷாதி ராணி, திலாரா அக்டர், நிகர் சுல்தானா(கே), ரிது மோனி, ஷோர்னா அக்தர், நஹிதா அக்டர், ரபேயா கான், சுல்தானா காதுன், ஃபஹிமா காதுன், மருபா அக்டர்.
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ராஷி கனோஜியா.