இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டூவர்ட் பிராட். இவர் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இப்போது 37 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் நடப்பு ஆஷஸ் கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் தொடர் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களைச் சேர்த்துள்ளது. இன்றைய நாள் ஆட்டம் முடிந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓய்வு அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டூவர்ட் பிராட் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 20 முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல் பேட்டிங்கில் ஒரு சதம் மற்றும் 13 அரைசதங்கள் என 3.647 ரன்களையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stuart Broad has announced his retirement! #Ashes #England #StuartBroad #Cricket pic.twitter.com/icJEFFDlDV
— CRICKETNMORE (@cricketnmore) July 29, 2023
அதேபோல் 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும், 56 டி20 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை விளாசியது இவரது கிரிக்கெட் கெரியரில் நீக்க இடம்பிடித்த நிகழ்வாக இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.