இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மரியாதை செய்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.
இந்த வேளையில் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செய்துள்ளனர்.
கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்தியக் கொடியை ஏற்றி, இந்திய அணியினர் இந்திய தேசிய கீதத்தைப் பாடும் காணொலியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
On the occasion of India's Independence Day, #TeamIndia members came together to hoist the flag pic.twitter.com/TuypNY5hjU
— BCCI (@BCCI) August 15, 2021
தற்போது பிசிசிஐயின் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.