காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அதன்படி இன்று நடைபெறும் அறையிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியில் மிரட்டிய ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸும் பவுண்டரிகளைப் பறக்கா விட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இங்கிலான்ந்து அணி தரப்பில் ஃப்ரெயா கேப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் வெறும் 23 பந்துகளில் அரைசதம் கடந்த ஸ்மிருதி மந்தனா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மிகக்குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனைப் படைத்தார். தற்போது ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A quick & fiery half-century
— Sony Sports Network (@SonySportsNetwk) August 6, 2022
Smriti Mandhana's power performance was on display as she scored the fastest Fifty of #CWG2022
You go girl #BirminghamMeinJitegaHindustanHamara #ENGvIND #B2022 #CWG2022 #SonySportsNetwork #SirfSonyPeDikhega @mandhana_smriti pic.twitter.com/MURtEZoCWb