ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளத. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்
நியூசிலாந்து மகளிர் அணி: சுஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன்(கே), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்.