
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப்(கே), ஷிம்ரான் ஹெட்மையர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஓஷேன் தாமஸ்.
இங்கிலாந்து: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், பிரைடன் கார்ஸ், ரெஹான் அஹ்மது, கஸ் அட்கின்சன்.