இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதையடுத்து 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்கிறார். அதேபோல் உம்ரான் மாலிக், அக்ஸர் படேல் ஆகியோருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோருக்கு வாய்ப்பு வழக்கப்பட்டுள்ளது.
இந்தியா: இஷான் கிஷன், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப்(கே), ஷிம்ரான் ஹெட்மியர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.