இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 3ஆவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதனால் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4ஆவது 20 ஓவர் போட்டி இன்று புளோரிடா மாகாணத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தாக அறிவித்துள்ளது. தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல்(கே), ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அகேல் ஹோசின், ஓபேட் மெக்காய்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்.