வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக டாம் லேதம் அணியை வழிநடத்துவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், டாம் லாதம்(கே), டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ஷமர் புரூக்ஸ், நிக்கோலஸ் பூரன் (கே), ஜெர்மைன் பிளாக்வுட், கேசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், யானிக் கரியா, அல்ஸாரி ஜோசப், கெவின் சின்க்ளேர்.