ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே : இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா, ரெஜிஸ் சகப்வா(கே), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.
இந்தியா : ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல்(கே), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.