தி ஹண்ட்ரெட்: முதல் சதத்தை விளாசி வில் ஸ்மித் சாதனை!

Will Smeed is the First centurion in the history of the hundred!
இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரெட் போட்டியில் முதல் சதத்தை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வில் ஸ்மீத்.
பிர்மிங்கமில் நடைபெற்ற பிர்மிங்கம் பீனிக்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிர்மிங்கம் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இப்போட்டியில் பீனிக்ஸ் அணியைச் சேர்ந்த 20 வயது வில் ஸ்மீத், 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியின் முதல் சதத்தை அடித்தவர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News