INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
![Wolvaardt, Luus Fightback As South Africa Stretch One-off Test To Final Day Against India INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/wolvaardt-luus-fightback-as-south-africa-stretch-one-off-test-to-final-day-against-india-lg1-lg.jpg)
INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement