மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறிவுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரேகர், ராதா யாதவ், தனுஜா கன்வர், ரேணுகா தாக்கூர் சிங்.
வங்கதேச மகளிர் அணி: திலாரா அக்தர், முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா(மே), ருமானா அகமது, இஷ்மா தன்ஜிம், ரிது மோனி, ரபேயா கான், ஷோர்னா அக்தர், நஹிதா அக்தர், ஜஹானாரா ஆலம், மருஃபா அக்தர்.