மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் இலங்கையில் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீராங்கனை தனுஜா கன்வர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். இதில் ஏற்கெனவே இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா தாக்கூர் சிங், தனுஜா கன்வார்
ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி: ஈஷா ரோஹித் ஓசா(கே), தீர்த்த சதீஷ், ரினிதா ரஜித், சமைரா தர்னிதர்கா, கவிஷா எகொடகே, குஷி ஷர்மா, ஹீனா ஹொட்சந்தானி, வைஷ்ணவி மகேஷ், ரித்திகா ரஜித், லாவண்யா கெனி, இந்துஜா நந்தகுமார்.