
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் முத்தரப்பு தொடரில் இன்று இரண்டாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை எதிர்த்து லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணி ஏற்கெனவே இலங்கை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியும் தொடரை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும். மேலும் இரு அணியிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன் இளம் வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி: லாரா வோல்வார்ட்(கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், லாரா குட்ஆல், கராபோ மெசோ, சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், நதின் டி கிளர்க், சோலே ட்ரையோன், நோன்குலுலெகோ மலாபா, அயபோங்கா காக்கா, மசபாடா கிளாஸ்
இந்திய மகளிர் அணி: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, காஷ்வீ கவுதம், அருந்ததி ரெட்டி, ஸ்நே ராணா, நல்லபுரெட்டி சரணி.