
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிலையி, இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுக வீராங்கனைகள் சாரா பிரைஸ் மற்றும் நிக்கி பிரசாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: ஹீலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கௌர்(கேப்டன்), அமெலியா கெர், சஜீவன் சஜனா, அமன்ஜோத் கவுர், ஜிந்திமணி கலிதா, சமஸ்கிருதி குப்தா, ஷப்னைம் இஸ்மாயில், சாய்கா இஷாக்.
டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: ஷஃபாலி வர்மா, மெக் லானிங் (கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், நிக்கி பிரசாத், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, மின்னு மணி, ராதா யாதவ்.