
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் போட்டியில் இறுதிவரை போராடிய நிலையிலும் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Gujarat Giants Playing XI : பெத் மூனி, லாரா வோல்வார்ட், தயாளன் ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர் (கே), டியாண்ட்ரா டோட்டின், ஹர்லீன் தியோல், சிம்ரன் ஷேக், தனுஜா கன்வர், சயாலி சத்காரே, பிரியா மிஸ்ரா, காஷ்வி கௌதம்.
Mumbai Indians Playing XI: ஹீலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), அமெலியா கெர், ஜி கமலினி, சஜீவன் சஞ்சனா, அமன்ஜோத் கவுர், சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், பருணிகா சிசோடியா