ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
வங்கதேசம்: முனிம் ஷஹ்ரியார், லிட்டன் தாஸ், அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன்(கே), மொசாடெக் ஹொசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், மஹேதி ஹசன்.
ஜிம்பாப்வே: ரெஜிஸ் சாகப்வா, கிரெய்க் எர்வின்(கே), வெஸ்லி மாதவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா, ரியான் பார்ல், மில்டன் ஷும்பா, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்ஸா, ரிச்சர்ட் நகரவா, தனகா சிவாங்கா.