காமன்வெல்த் 2022: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்!
                            
                                                        
                                CWG 2022: Pakistan Women have won the toss and have opted to bat
                            இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, தீப்தி சர்மா, ராதா யாதவ், ஸ்னே ராணா, மேக்னா சிங், ரேணுகா சிங்.
பாகிஸ்தான்: இராம் ஜாவேத், முனீபா அலி, ஒமைமா சோஹைல், பிஸ்மா மரூஃப்(கே), அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், கைனத் இம்தியாஸ், பாத்திமா சனா, துபா ஹாசன், டயானா பெய்க், அனம் அமீன்.
Advertisement
  
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News