
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. அயர்லாந்து அணி ஏற்கெனவே டெஸ்ட் போட்டியை கைப்பற்றி உத்வேகத்துடன் இப்போட்டியிலும் அதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து பிளேயிங் லெவன்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டக்ரெல், ஆண்டி மெக்பிரைன், மார்க் அதில், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷுவா லிட்டில்
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: தடிவனாஷே மருமானி, பென் கரன், கிரெய்க் எர்வின்(கேப்டன்), சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, ஜோனாதன் கேம்பல், வெலிங்டன் மசகட்சா, நியூமன் நியாம்ஹுரி, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிளெஸிங் முசரபானி.