
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்துள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இதில் இரு அணிகளுகாளும் ஏற்கெனவே தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள காரணத்தால், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றினர். இதன் காரணமாக இரு அணியும் கூடுதல் உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அயர்லாந்து பிளேயிங் லெவன்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் காம்பர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அதிர், ஆண்டி மெக்பிரைன், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோசுவா லிட்டில்
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: பிரையன் பென்னட், பென் கரன், கிரெய்க் எர்வின்(கேப்டன்), வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, ஜோனாதன் கேம்பல், தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகாட்சா, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிளெசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.