
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 6) புலவாயோவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேய்க் எர்வின் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளர். இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் லெசெகோ சினோக்வேன், சேனுரன் முத்துசாமி, பிரேனெலன் சுப்ரயன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணியில் தியான் மேயர்ஸ் மற்றும் குண்டாய் மாடிகிமு ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி ஸோர்ஸி, லெசெகோ செனோக்வானே, வியான் முல்டர்(கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் பிரீவிஸ், கைல் வெர்ரைன், செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், ப்ரீனெலன் சுப்ரயன், கோடி யூசுஃப்
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: தியான் மேயர்ஸ், டகுட்ஸ்வானாஷே கைடானோ, நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின்(கேப்டன்), வெஸ்லி மதேவெரே, தஃபட்ஸ்வா சிகா, வெலிங்டன் மசகட்சா, குண்டாய் மாடிகிமு, பிளெஸிங் முசரபானி, தனகா சிவாங்கா