அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் அயர்லாந்து அணி 3வெற்றிகளைப் பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பாற்றியுள்ளது..
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பர்னி (கே), ஹேரி டெக்டர், வில்லியம் மெக்ளின்டாக், ஷேன் கெட்கேட், நீல் ராக், ஆண்டி மெக்பிரைன், மார்க் அதிர்,ஜோஷுவா லிட்டில், கிரேக் யங்.
ஜிம்பாப்வே : வெஸ்லி மாதேவரே, டினாஷே கமுன்ஹுகம்வே,ரெஜிஸ் சாகப்வா, டியோன் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, லூக் ஜோங்வே, டொனால்ட் டிரிபனோ, வெலிங்டன் மசகட்ஸா, பிளசிங் முசரபாணி, ரிச்சர்ட் ந்கராவா.