இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அற்புதமான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரோஹித்துடன் இணைந்த புஜாரா ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார். மறுமுனையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார்.
பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 127 ரன்களுக்கும், புஜாரா 61 ரன்களுக்கும் ராபின்சன்னின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் விராத் கோலி, ஜடேஜா இருவரும் மேலும் தடுப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புகளுக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோலி 22, ஜடேஜா 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதன்மூலம் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஹைலைட்ஸ் காணொளி!