சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்களும், பந்து வீச்சு முறைகளும்..!
சுழற்பந்து வீச்சில் இருக்கும் நுணுக்கங்கள் மாற்றும் பந்துவீச்சு முறைகள் குறித்த சிறப்பு பதிவு உங்களுக்காக..!
கிரிக்கெட் என்பது தற்போதைய உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த விளையாட்டில் இருக்கும் சுவாரஸ்யங்கள் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் சமீப காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒட்டுமொத்த உலகையும் பிரம்மிப்படையும் வகையில், பரபரப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்து வருகிறது.
Trending
இந்த விளையாட்டில் மிகவும் முக்கியாமனது என்றால் அது பந்துவீச்சு தான். ஏனெனில் ஒரு பந்துவீச்சாளர் சரியாக பந்துவீசினால் எதிரணி எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், அப்போட்டியில் மண்ணை கவ்வுவது நிச்சயம்.
அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சு அணிக்கு ஒரு துருப்புச்சீட்டாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அப்படி சுழற்பந்து வீச்சில் இருக்கும் நுணுக்கங்கள் மாற்றும் பந்துவீச்சு முறைகள் குறித்த சிறப்பு பதிவு உங்களுக்காக..!
சுழற்பந்து வீச்சாளர்களின் பிரம்மாஸ்திரங்கள்
1) கூக்லி (Googly) - கூக்லி எனப்படும் சுழற்பந்துவீச்சு முறை சமீப காலமாக கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. இந்த வகையிலான பந்துகளை இடது கை மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றன.
ஆனால் கூக்லி வகை பந்துகளை வீசுவதற்கு ஒவ்வொருவரும் புது புது யுக்திகளைக் கையாளுக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் 3ஆவது விரலின் இடுக்கில் பந்தை சுழலவைத்து கூக்லியை வீசுகின்றன.
2) தூஸ்ரா (Doosra) - தூஸ்ரா எனும் பெயரைக் கேட்டதும் அனைவருக்கும் நினைவில் வருவது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தான். ஆனால் இந்த வகையிலான பந்துகளை முதலில் வீசியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சக்லைன் முஷ்டாக் தான். இது ஆஃப்-பிரேக் பந்து வீச்சாளர்களால் வீசப்படும் பந்து வீச்சு முறை.
ஆனால் ஐசிசியின் கொண்டுவந்துள்ள விதிகளின் அடிப்படை இம்முறையான பந்துவீச்சு அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் நீங்கள் இதில் தவறு செய்தால், உங்களுக்கு தடைவிதிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆம், தூஸ்ரா வகையிலான பந்துகளை வீசுவதற்கு நிரைய அனுபவம் தேவை. ஏனெனில் விதிகளுக்கு புறம்பாக நீங்கள் கையசைவைக் கொண்டிருந்தால் அது உங்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்த கூடும்
3) டாப் ஸ்பின் (Top Spin) - டாப் ஸ்பின் என்பது சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு பந்துவீச்சு முறை. அதிலும் குறிப்பாக ஆஃப் பிரேக் மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த வகையிலான பந்துகளை அதிகம் வீசுவர்.
இந்த வகை பந்துவீச்சில், பந்து நேராக ஸ்டம்பைநோக்கி வரும். இது வழக்கமான பந்துகளை போலல்லாமல் பக்கவாட்டு திசையில் நகரும். இந்த வகையிலான் பந்துகளை வீச ஆடுகளத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்க வேண்டியது அவசியம்.
4) ஃபிளிப்பர் (Flipper) - இந்த வகையிலான பந்து வீச்சு முறை லெக் பிரேக் அதாவது மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்படுகிறது. அவர்கள் இந்த வகையிலான பந்துகளை வீசும் போது, அது பிட்ச் ஆனவுடன், குறைந்த அளவில் பவுன்ஸ் ஆகி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும்.
5) ஆர்ம் பால் (Arm Ball) - ஆர்ம் பால் எனப்படும் பந்துவீச்சு யுக்தியை பெரும்பாலும் ஆஃப்-பிரேக் பந்து வீச்சாளர்களால் வீசப்படுகிறது. இந்த பந்துவீச்சு முறையில் பந்து விரைவாக உங்களது கையை விட்டு வெளியேறும். மேலும் அது பிட்ச் ஆகி நேராக செல்லும்.
6) ஸ்லைடர் (Slider) - ஸ்லைடர் வகை பந்துவீச்சு முற்றுலிம் வழக்கத்திற்கு மாறான ஒரு பந்துவீச்சு முறை என கருத்தப்படுகிறது. ஏனெனில் இந்தவகை பந்துகளை வீசும் போது பந்துவீச்சாளர் லெக் ஸ்பின் வீசுகிறாரா அல்லது, ஸ்லைடரை வீசுகிறாரா என்ற குழப்பம் பேட்ஸ்மேன்களுக்கு வரும்.
ஏனெனில் ஸ்லைடரை வீசும் போது பந்துவீச்சாளர் தனது மணிக்கட்டு பகுதியை உபயோகிப்பார். ஆனால் அது லெக் ஸ்பின்னாக இல்லாமல் ஸ்லைடராக மாறுவது மணிக்கட்டை உபயோகிக்கும் முறையில் தான் உள்ளது.
7) கேரம் பால் (Carrom Ball) - இலங்கை அணியின் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்திய பந்துவீச்சு முறைந்த இந்த கேரம் பால். தற்போது இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இம்முறையில் வித்வானாக விளங்குகின்றார்.
இந்த கேரம் பாலை வீசும் போது பந்துவீச்சாளர் தனது கட்டை விரல், ஆள் காட்டி விரல் மற்றும் கை விரல் ஆகியவற்றை உபயோகித்து பந்தை வீசுகின்றனர். இதனால் சாதாரண ஆஃப் ஸ்பின்னை காட்டிலும், கேரம் பால் பிட்சிலிருந்து பேட்ஸ்மேனை நோக்கி விரைவாக செல்வதே அதன் சிறப்பம்சம்.
Win Big, Make Your Cricket Tales Now